Tuesday, June 26, 2012

உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...

சொந்த செலவிலை  சூனியம் வைக்கிறதெண்டு கேள்வி பட்டிருக்கிறியளோ ? அது இதுதான்..   ஆனானப்பட்டவங்களே  நாலைஞ்சு CCIE முடிச்சிட்டு   சும்மா பொத்திக்கொண்டு இருக்கிறாங்கள் .. நான் ரெண்டு முடிச்சிட்டு  கொழுப்பிலை(SK)  கூவி விட்டன் , அது எல்லாரும் ஏறி இருந்து கும்மி அடிக்க வாய்ப்பா போச்சு..



முதல்ல பிரஷாந்த் எண்டு ஒருத்தன் வந்தான்வந்து ஒரு மூஞ்சி புத்தக நிகழ்ச்சியை தொடக்கி விட்டான். அதிலை இருந்து எல்லாம் சூடு பிடிச்சுது.. அவன்  இந்த நிகழ்ச்சிக்கு  சும்மா like பண்ண வந்த கௌரிக்கு அடியெடுத்து குடுக்க கச்சேரி தொடங்கிச்சுது..
 



இவன் JK இருக்கிறான், அவன் தன்ற படலையை தவிர மிச்ச எல்லாற்ற படலையையும் தட்டி கோர்த்து விடுறதிலை விண்ணன் , டே  இதுக்குள்ளை ஏன்டா   பிரஷாந்தை இழுக்கிறாய் .. அதுக்குள்ளை கீர்த்தியை வேற கோர்த்து விடுறாய் .. எனக்கொரு சந்தேகம்.. கீர்த்தி நீ சத்தியமா இவ்வளவு அப்பாவியடா ?? இவன் JK கோர்த்து விடுற எல்லாத்துக்கும் போய் நுளையிராய் .. .



அதுக்குள்ளை அஜீ , இவர் அடுத்தவர் .. .. அடிக்கடி வண்டியை தடவிக்கொண்டு " உடம்பை கவனிக்க வேணும் மச்சான் " சொல்லுறானே  எண்டுபோட்டு , ஒரு பாட்டியை போடுவமெண்டால் பயபுள்ளை ஊரைப்பற்றி ஒரு கதை ,
 
அதை வேற  பெருமையா சொல்லுறார்..
விதி router இக்கு மேலை ஏறி  நிண்டு சிரிசுதுதோ .. போன காசுகளை எல்லாம் ஜோசிச்சுப்பாரப்ப பிறகு MRராதாவின் ரத்தக்கண்ணீர் தான் வரும்



சோறு தண்ணி இல்லாமல் படிச்சதோ ??  அப்பிடி ஒண்டு இருக்கெண்டே நீங்கள் கண்ணிலை காட்டவே இல்லை .வாங்கின நல்ல சாப்பாடெல்லாம் நான் பாக்கிறத்துக்கு முதலே மொத்து மொத்தேண்டு மொத்திப்போட்டு  இப்ப pancake சாப்பிட்டனான்  drink குடிச்சனான் எண்டு சொல்லுறியல் ம்ம்..




இதுக்குள்ள சக்திவேல் அண்ணை , இவற்ற எழுத்துத்தான் வித்தியாசமான நக்கலா இருக்கெண்டு  பார்த்தா பின்னூட்டம் கூட ஒரு நக்கலா கிடக்கு..சிங்கப்பூர் வந்தா autograph எண்டு இந்தாள் பகிடி எல்லாம் விடுறார் , அதண்ணை நீங்கள் sydney இல சங்கம் வைச்சு  தமிழை வளர்க்க ஒரு கூட்டம் போடுவீங்கள் தானே அப்ப இவன் தோழர் JK இடம் வாங்குங்கோ





முடிவா .. அடியேனின் இந்த சிறு சாதனையைபெரு மலையாக்கி அதுக்கு  ஒரு விழா எடுத்த அன்பர் , நண்பர் கூட்டத்துக்கும். சமயம் பார்த்து ஒரு பதிவு போட்டு தாக்கிய என்ர பாரியாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்ச எல்லாருக்கும் நன்றியப்பா..
என்ர  செலவிலையே


பிகு:நீங்கள் இப்ப கேக்கலாம் ஏனப்பா இப்ப இதையெல்லாம் எழுதிறாய் எண்டு.. தமிழ் மக்களே உங்கள் அனைவருக்கும் ஒண்டு சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரை தொடக்கிய அன்பர் மற்றும் நண்பர்  பிரஷாந்த் அவர்களின் பிறந்த நாள் வெகு விரைவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது .
 
அதற்கு ஒரு தொடக்கமா இந்த பதிவு அமையும் எண்டு ஒரு நம்பிக்கை..
 

Monday, November 9, 2009

கவிதையும் தோசையும் !!!!!!!!

ஒரு காலத்திலை நான் கவிஞனாக விரும்பினனான் ...
உங்கட நல்ல காலம் அது என்ர விருப்பத்தோடை மட்டும் போச்சு இல்லையெண்டால் என்ர கடிக்கவிதைகளையும் கவிதை எண்ட பேரிலை எழுதிற குப்பைகளையும்
வாசிச்சு நீங்கள் அழவேண்டி இருந்திருக்கும் ...

நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது எனது தமிழ் ஆசான் ச வே ..
அப்போ சொல்லவேணுமா எனது கவிதை வெறியை ...
ஆனால் அப்போதெல்லாம் கவிதையை சிறிது ரசிக்கும் குணம் இருந்தது .
இதிலை "எவனொருவன் கவிதையை ரசிக்கின்றானோ அவனே மிகச்சிறந்த கவிஞனாவான் " இது எனக்கு நானே சொல்லிக்கொண்ட ஒரு தத்துவம்


இப்படியாக் வளர்ந்த எனது கவி ஆசை ஒரு கட்டத்தில் மலர்ந்து மணம் வீசதொடங்கியது.
எனது ஆசை மலர்ந்த தருணம் ஈழத்தமிழரின் மற்றுமொரு இருண்ட காலம்.
இது நடக்கும்போது நான் 10 ஆம் வகுப்பில் இருக்கிறேன் அப்ப ஜோசிச்சு பாருங்கோ இந்த மலர் 3 வருஷம் மொட்டாகவே இருந்தது..

யாழ்ப்பாணத்திலை இருந்து வடமராச்சிக்கு இடம்பெயர்ந்து ஏதிலிகளாக இருந்த நேரம்.
அந்த நேரத்திலை எல்லாரும் தாச்சி கிட்டிப்புள் எண்டு விளையாட நான் மட்டும் தனிய இருந்து நாடு நிலமையப்பற்றி ஜோசிக்கிறனான்.
இந்த பரதேசி, ஒரு சோம்பேறிப்பரதேசி அதால விளையாட போறேல்லை ஆனால் நாட்டு நிலைமையை ஜோசிச்சதெண்டு கதை விடுது எண்டு நீங்கள் ஜோசிக்காக்கூடாது
அப்பாவும் எங்கட வீட்டுக்காரர் என்னை விடேல்லை .. படி படி எண்டு ஒரே கரைச்சல்.
அதாலை நான் ஒரு கொப்பியை தூக்கி கொண்டு படிக்கிற மாதிரி ஒவ்வொரு நாளும் நடிக்க தொடங்கினன்.
இந்த நாடு நடப்புக்களை எல்லாம் என்ற கவிதையால் தீர்த்து விடலாம் எண்டொரு நினைப்பிலை , என்ற கவிதைக்காவியத்தை எழுதத்தொடங்கினேன்

இப்ப அந்த புகழ் பெற்ற காவியத்திலிருந்து சில வரிகள் .......

கார்காலமாய் போர்க்கால மேகம் சூழ்ந்திருக்க.
நீர் கோலமாய் நினைவுகள் கலைய..
என்றவாறு எனது கவிதை தொடர்ந்து சென்றது..

( அந்த முழுக்கவிதையையும் இஞ்ச நான் எழுதினால் நீங்கள் goole இற்கு அறிவிச்சு இந்தப்பதிவையே நிறுத்தக்கூடும் .. அதனால இவ்வளவும் காணும்..)

இந்த காவியம் இப்ப முக்கியமில்லை இதுக்கு வந்த பின்னூட்டந்தான் எனக்கு முக்கியம்

அடுத்த நாள் காலமை நான் போயப்பார்த்தன் ...
எனது கவிதைக்கு நிறைய பின்னுட்டங்கள் வந்திருந்திச்சு .. அதயும் பாருங்கோ..

ஏண்டா இவ்வளவு காலமும் நல்லாதானே இருந்தனி இண்டைக்கு உனக்கு என்ன நடந்தது..
- இது என்ற தம்பி

இதுக்குதான் சொல்லுறனான் தனியத்தனிய இருந்து ஜோசிக்கதை எண்டு.. பாத்தியே இப்ப இப்பிடியாப்போச்சு. ( ஏதோ எனக்கு விசர் முத்திப்போச்செண்ட மாதிரி ஒரு பின்னூட்டம் )
- இது என்ற அக்கா

இதுக்குள்ள ஒரு வஞ்சப்புகழ்ச்சி ... கவிஞரே வாருங்கள் வந்து உங்கள் கவிதை மழையை தாருங்கள்.. - யாரோ..

என்னாலை என்ற உள்வீட்டு குத்துகளை தாங்கேலாமல் போட்டுது. அதாலை கொஞ்சநாள் மூஞ்சிய நீட்டிக்கொண்டு திரிஞ்சன் ..
ஆனால் அம்மா நினைச்சா , பெடியனுக்கு பிடிச்ச தோசை கன காலமாய் சுடேல்லை அதுதான் இப்பிடி மூஞ்சிய நீட்டிக்கொண்டு திரியிறான் எண்டு ..
பிறகென்ன ஒரு தோசையை சுட்டுத்தந்து போட்டு அம்மா சொன்னா " சரி சரி இனி மூஞ்சியை நீட்டாமல் இரு பாப்பம் " ...

ஆனால் இது வரைக்கும் கவிதைக்கும் தோசைக்கும் என்ன சம்பந்தமெண்டு எனக்கு தெரியேல்லை ..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருந்தாலும் நான் இப்ப ரசிச்ச கவிதை ஒண்டு.(சத்தியமாய் நான் எழுதலைங்கோ )

அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.

Wednesday, September 10, 2008

கதியாலும் கதாநாயகனும் .....

எல்லாரையும் போல சின்னனிலை நானும் ஒரு கதாநாயகனாக வரவேணுமெண்டு நினைச்சிருக்கிறன்..
ஆனால் அந்த நேரத்திலை நான் வாசிச்ச புத்தகங்கள் பெரும்பாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள்தான் (ஆனால் அந்த வயசுக்கு பிறகு அந்த புத்தகங்களை நான் தொட்டும் பார்க்கேல்லை ).. அதாலை என்னகு தெரிஞ்ச கதாநயகன் அர்ச்சுனன் தான் .. அந்த நாயகன் மாதிரி எல்லாம் செய்ய வேணுமெண்டு ஆசை..

எண்பதுகளின் பிற்பகுதியில் இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக எங்கட பக்கங்களில் மரக்கறி தட்டுப்பாடு இருந்திச்சு ... இதைதீர்க்க அந்த நேரத்தில எல்லாரும் வீட்டு தோட்டம் வைக்க தொடங்கீச்சினம் ...
என்ர அப்பரும் இப்பிடி ஒரு பஞ்சத்தை தான் தனிய தீர்கிரதாய் வெளிகிட்டார் உடனே எங்கட வீட்டுக்கு முன்னாலை இருந்த வளவிலை வீட்டு தோட்டத்தை தொடங்கீட்டார் . அனால் தோட்டத்திலை விளைஞ்சதிலை அரைவாசியை திண்டு கொழுத்தது எங்கட வீட்டு ஆடுகள் தான்..

அந்தத்தோட்டதில நாங்கள் ராசவள்ளிக்கிழங்கு வைச்சிருந்தம் ..
அது வளரத்துக்கு கிளுவங்கதியால் போட்டு வைச்சிருந்தார் அப்பர் ..
கிழங்கு எடுத்து முடின்ச்சவுடனே .. அந்த கிலுவந்கதியால எடுத்து வேலி போட ஜோசிச்சிருக்கிறார் போல இருக்கு
ஆனால் அதெல்லாம் இந்தக்கதானாயகனுக்கு தெரியாது பாருங்கோ .. ஒருநாள் மத்தியானம் தோட்டத்தை போயப்பாத்தன் .
எல்லாக்கதியாலும் நல்ல கணக்கான அளவில இருந்த்திச்சு. என்ர கையெல்லாம் துருதுருச்சுது.
பிறகென்ன என்னக்குள்ள இருந்த அர்ச்சுனன் வெளிகிட்டன் பாருங்கோ ..வெளிக்கிட்ட அர்ச்சுனன் சும்மா இருக்கேல்லை எனக்கு மேலை
ஏறி இருந்து ஒரு கும்மி அடிச்சு போட்டுத்தான் வெளிக்கிட்டான்
கையிலை கத்தியை எடுத்து என்ற கைக்கு ஆப்பிட எல்லா கதியாளையும் ஒரே வெட்டுத்தான் ..
பின்னேரம் அப்பா வேலையாளை வந்து தோட்டத்தை பார்த்தார்..
பிறகென்ன ஒரே சத்தந்தான் (இதை பாருங்கோ நான் இப்பிடி சொல்லலாம் பாரதப் போருக்கான ஒரு அறை கூவல் )
யாரப்பா இதைச்செய்து எண்டொரு கேள்வி கேட்டார்.
எனக்குளே இருந்த கதாநாயகன் உடனேயே தான்தான் இதைச்சிய்தது எண்டொரு மார்தட்டளோட வெளிக்கிட்டான்
பிறகென்ன ஒரே ஓட்டப்பந்தயந்தான். நான் ஓட அப்பா என்னை துரத்த ...ஓட்டப்பந்தயந்தான் ...
அப்பா என்னை அடிக்கிரத்துக்கு துரத்திக்கொண்டு வாரார் ,
நானும் விடாமல் ஓடினன். ஓட்டமண்டால் அப்பிடி ஒரு ஓட்டம்
சுசந்திகா தோத்தா பாருங்கோ,
இருந்தாலும் என்ற முதுகில மூண்டு அடி ..
என்ர நல்ல காலத்துக்கு பக்கத்து வீட்டு ஆச்சி வந்தா
நான் அவவுக்கு பின்னாலை ஓடீட்டன் .
அந்த மனிசிதான் பிறகு எனக்கு அபயமளிச்சுது..
அப்பாவை பார்த்து யோகர் உன்னானை அடிக்காத எண்டொரு
சத்தியம் செய்ததால நான் மிச்ச அடி வாங்காமல் தப்பினான் .
இருந்தாலும் அந்த மூண்டு அடியால எனக்கு முதுகில மூண்டு வரி தழும்பு .
கடசியலை மகாபாரத கதாநாயகன் ஆக வெளிக்கிட்டு இராமாயண கதாபாத்திரம்
அணில் மாதிரி முதுகில மூண்டு தழும்பு வந்ததுதான் மிச்சம்..
இப்பவும் கதாநாயகன் கனவுகள் வரும்போது அந்தத்தளும்புகளை நினைக்கிறது தான் ...

Monday, June 23, 2008

நன்றி........

எல்லாருக்கும் மறுபடியும் வணக்கம் ......
ஒரு பதிவையே பின்னூட்டமாக அனுப்பிய சசீவனுக்கு பிரத்தியேக நன்றி..

எனது பதிவைப்பற்றி மீண்டும் ஒரு விளக்கம்.. .. பதிவுக்கு பெயரை மட்டும்தான் "சே" இடமிருந்து எடுத்திருக்கிறன். அந்த கதாநாயகனை போல சமூகத்தை சீராக்குவது மிகவும் கடினம்தான்..

இந்தக்காலத்தில கதாநயகனாக வாழ்வது கடினமான விஷயம்(உண்மையாக.. வாழ முயல்வதே கடினம்தான் ) .. ஏனெண்டால் கதாநாயகனாக முயன்று நான் பட்ட தொல்லைகளை இந்தப்பதிவில பிறகு பதிகிறேன் ..
மீண்டும் சந்திப்போம்.... நன்றி.............

Thursday, June 19, 2008

நல்வரவு

இந்த பதிவுக்கு வந்த அனைவருக்கும் வணக்கம் .

எல்லாரும் இணையத்தில பதிவுகளை எழுதீனம் எண்டு நானும் ஒரு பதிவை பதிஞ்சு போடுவம் எண்டு இதை தொடங்கி இருக்கிறன் .. பாப்பம் என்னென்ன பின்னூட்டங்கள் வரப்போகுதோ தெரியேல்லை ...
என்னடா பதிவுக்கு புது மாதிரி பெயரா "பாதசாரியின் தினக்குறிப்பு" எண்டு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் ஜோசிக்கிறது விளங்குது . இந்த பெயருக்கு பின்னால ஒரு வரலாற்று சம்பவம் ஒண்டிருக்கு... அதென்னண்டால் என்னுடைய கதா நாயகர்களில் ஒருத்தர் தன்னுடைய பதிவை " உந்துறுளி தினக்குறிப்பு " எண்டு பதிஞ்சு போட்டு வீரமரணம் அடைஞ்சிட்டார் (உங்களுக்கு தெரியும் எண்டாலும் அவர் யாரெண்டு சொல்லுறன் .. அவர் வேறையாருமில்லை "சே" தான்..).. அப்ப என்ற பதிவுக்கும் அப்பிடி ஒரு பெயர் வைச்சா நானும் ஒரு வரலாற்று நாயகன் ஆகலாம் எண்டொரு பகல் கனவுதான் ....
இந்த பதிவில முழுக்க முழுக்க என்னை சார்ந்த விடயங்களும் பொது விடயங்களும் உள்ளடக்கபட்டிருக்கும் ... (ஒரு பாதுகாப்பு தான் பாருங்கோ .. இல்லாட்டி கனக்க பிரச்சினை வரும்...) ஒருத்தரும் கோவிக்க வேண்டாம் உங்கள பற்றி எழுதேல்லை எண்டு. விசயங்களை தாங்கோ எழுதுவம்..
இந்த பதிவுக்கு வரும் எல்லோரும் தயவு செய்து பின்னூட்டங்களை பதிஞ்சிட்டு போங்கோ ..
இல்லாட்டி அழுதுடுவன் ..