Wednesday, September 10, 2008

கதியாலும் கதாநாயகனும் .....

எல்லாரையும் போல சின்னனிலை நானும் ஒரு கதாநாயகனாக வரவேணுமெண்டு நினைச்சிருக்கிறன்..
ஆனால் அந்த நேரத்திலை நான் வாசிச்ச புத்தகங்கள் பெரும்பாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள்தான் (ஆனால் அந்த வயசுக்கு பிறகு அந்த புத்தகங்களை நான் தொட்டும் பார்க்கேல்லை ).. அதாலை என்னகு தெரிஞ்ச கதாநயகன் அர்ச்சுனன் தான் .. அந்த நாயகன் மாதிரி எல்லாம் செய்ய வேணுமெண்டு ஆசை..

எண்பதுகளின் பிற்பகுதியில் இந்திய இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக எங்கட பக்கங்களில் மரக்கறி தட்டுப்பாடு இருந்திச்சு ... இதைதீர்க்க அந்த நேரத்தில எல்லாரும் வீட்டு தோட்டம் வைக்க தொடங்கீச்சினம் ...
என்ர அப்பரும் இப்பிடி ஒரு பஞ்சத்தை தான் தனிய தீர்கிரதாய் வெளிகிட்டார் உடனே எங்கட வீட்டுக்கு முன்னாலை இருந்த வளவிலை வீட்டு தோட்டத்தை தொடங்கீட்டார் . அனால் தோட்டத்திலை விளைஞ்சதிலை அரைவாசியை திண்டு கொழுத்தது எங்கட வீட்டு ஆடுகள் தான்..

அந்தத்தோட்டதில நாங்கள் ராசவள்ளிக்கிழங்கு வைச்சிருந்தம் ..
அது வளரத்துக்கு கிளுவங்கதியால் போட்டு வைச்சிருந்தார் அப்பர் ..
கிழங்கு எடுத்து முடின்ச்சவுடனே .. அந்த கிலுவந்கதியால எடுத்து வேலி போட ஜோசிச்சிருக்கிறார் போல இருக்கு
ஆனால் அதெல்லாம் இந்தக்கதானாயகனுக்கு தெரியாது பாருங்கோ .. ஒருநாள் மத்தியானம் தோட்டத்தை போயப்பாத்தன் .
எல்லாக்கதியாலும் நல்ல கணக்கான அளவில இருந்த்திச்சு. என்ர கையெல்லாம் துருதுருச்சுது.
பிறகென்ன என்னக்குள்ள இருந்த அர்ச்சுனன் வெளிகிட்டன் பாருங்கோ ..வெளிக்கிட்ட அர்ச்சுனன் சும்மா இருக்கேல்லை எனக்கு மேலை
ஏறி இருந்து ஒரு கும்மி அடிச்சு போட்டுத்தான் வெளிக்கிட்டான்
கையிலை கத்தியை எடுத்து என்ற கைக்கு ஆப்பிட எல்லா கதியாளையும் ஒரே வெட்டுத்தான் ..
பின்னேரம் அப்பா வேலையாளை வந்து தோட்டத்தை பார்த்தார்..
பிறகென்ன ஒரே சத்தந்தான் (இதை பாருங்கோ நான் இப்பிடி சொல்லலாம் பாரதப் போருக்கான ஒரு அறை கூவல் )
யாரப்பா இதைச்செய்து எண்டொரு கேள்வி கேட்டார்.
எனக்குளே இருந்த கதாநாயகன் உடனேயே தான்தான் இதைச்சிய்தது எண்டொரு மார்தட்டளோட வெளிக்கிட்டான்
பிறகென்ன ஒரே ஓட்டப்பந்தயந்தான். நான் ஓட அப்பா என்னை துரத்த ...ஓட்டப்பந்தயந்தான் ...
அப்பா என்னை அடிக்கிரத்துக்கு துரத்திக்கொண்டு வாரார் ,
நானும் விடாமல் ஓடினன். ஓட்டமண்டால் அப்பிடி ஒரு ஓட்டம்
சுசந்திகா தோத்தா பாருங்கோ,
இருந்தாலும் என்ற முதுகில மூண்டு அடி ..
என்ர நல்ல காலத்துக்கு பக்கத்து வீட்டு ஆச்சி வந்தா
நான் அவவுக்கு பின்னாலை ஓடீட்டன் .
அந்த மனிசிதான் பிறகு எனக்கு அபயமளிச்சுது..
அப்பாவை பார்த்து யோகர் உன்னானை அடிக்காத எண்டொரு
சத்தியம் செய்ததால நான் மிச்ச அடி வாங்காமல் தப்பினான் .
இருந்தாலும் அந்த மூண்டு அடியால எனக்கு முதுகில மூண்டு வரி தழும்பு .
கடசியலை மகாபாரத கதாநாயகன் ஆக வெளிக்கிட்டு இராமாயண கதாபாத்திரம்
அணில் மாதிரி முதுகில மூண்டு தழும்பு வந்ததுதான் மிச்சம்..
இப்பவும் கதாநாயகன் கனவுகள் வரும்போது அந்தத்தளும்புகளை நினைக்கிறது தான் ...