Tuesday, June 26, 2012

உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...

சொந்த செலவிலை  சூனியம் வைக்கிறதெண்டு கேள்வி பட்டிருக்கிறியளோ ? அது இதுதான்..   ஆனானப்பட்டவங்களே  நாலைஞ்சு CCIE முடிச்சிட்டு   சும்மா பொத்திக்கொண்டு இருக்கிறாங்கள் .. நான் ரெண்டு முடிச்சிட்டு  கொழுப்பிலை(SK)  கூவி விட்டன் , அது எல்லாரும் ஏறி இருந்து கும்மி அடிக்க வாய்ப்பா போச்சு..



முதல்ல பிரஷாந்த் எண்டு ஒருத்தன் வந்தான்வந்து ஒரு மூஞ்சி புத்தக நிகழ்ச்சியை தொடக்கி விட்டான். அதிலை இருந்து எல்லாம் சூடு பிடிச்சுது.. அவன்  இந்த நிகழ்ச்சிக்கு  சும்மா like பண்ண வந்த கௌரிக்கு அடியெடுத்து குடுக்க கச்சேரி தொடங்கிச்சுது..
 



இவன் JK இருக்கிறான், அவன் தன்ற படலையை தவிர மிச்ச எல்லாற்ற படலையையும் தட்டி கோர்த்து விடுறதிலை விண்ணன் , டே  இதுக்குள்ளை ஏன்டா   பிரஷாந்தை இழுக்கிறாய் .. அதுக்குள்ளை கீர்த்தியை வேற கோர்த்து விடுறாய் .. எனக்கொரு சந்தேகம்.. கீர்த்தி நீ சத்தியமா இவ்வளவு அப்பாவியடா ?? இவன் JK கோர்த்து விடுற எல்லாத்துக்கும் போய் நுளையிராய் .. .



அதுக்குள்ளை அஜீ , இவர் அடுத்தவர் .. .. அடிக்கடி வண்டியை தடவிக்கொண்டு " உடம்பை கவனிக்க வேணும் மச்சான் " சொல்லுறானே  எண்டுபோட்டு , ஒரு பாட்டியை போடுவமெண்டால் பயபுள்ளை ஊரைப்பற்றி ஒரு கதை ,
 
அதை வேற  பெருமையா சொல்லுறார்..
விதி router இக்கு மேலை ஏறி  நிண்டு சிரிசுதுதோ .. போன காசுகளை எல்லாம் ஜோசிச்சுப்பாரப்ப பிறகு MRராதாவின் ரத்தக்கண்ணீர் தான் வரும்



சோறு தண்ணி இல்லாமல் படிச்சதோ ??  அப்பிடி ஒண்டு இருக்கெண்டே நீங்கள் கண்ணிலை காட்டவே இல்லை .வாங்கின நல்ல சாப்பாடெல்லாம் நான் பாக்கிறத்துக்கு முதலே மொத்து மொத்தேண்டு மொத்திப்போட்டு  இப்ப pancake சாப்பிட்டனான்  drink குடிச்சனான் எண்டு சொல்லுறியல் ம்ம்..




இதுக்குள்ள சக்திவேல் அண்ணை , இவற்ற எழுத்துத்தான் வித்தியாசமான நக்கலா இருக்கெண்டு  பார்த்தா பின்னூட்டம் கூட ஒரு நக்கலா கிடக்கு..சிங்கப்பூர் வந்தா autograph எண்டு இந்தாள் பகிடி எல்லாம் விடுறார் , அதண்ணை நீங்கள் sydney இல சங்கம் வைச்சு  தமிழை வளர்க்க ஒரு கூட்டம் போடுவீங்கள் தானே அப்ப இவன் தோழர் JK இடம் வாங்குங்கோ





முடிவா .. அடியேனின் இந்த சிறு சாதனையைபெரு மலையாக்கி அதுக்கு  ஒரு விழா எடுத்த அன்பர் , நண்பர் கூட்டத்துக்கும். சமயம் பார்த்து ஒரு பதிவு போட்டு தாக்கிய என்ர பாரியாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்ச எல்லாருக்கும் நன்றியப்பா..
என்ர  செலவிலையே


பிகு:நீங்கள் இப்ப கேக்கலாம் ஏனப்பா இப்ப இதையெல்லாம் எழுதிறாய் எண்டு.. தமிழ் மக்களே உங்கள் அனைவருக்கும் ஒண்டு சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரை தொடக்கிய அன்பர் மற்றும் நண்பர்  பிரஷாந்த் அவர்களின் பிறந்த நாள் வெகு விரைவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது .
 
அதற்கு ஒரு தொடக்கமா இந்த பதிவு அமையும் எண்டு ஒரு நம்பிக்கை..
 

1 comment:

எஸ் சக்திவேல் said...

இதை இப்பதான் பாக்கிறன். நக்கல் எல்லாம் இல்லை அப்பு. வாழ்த்துக்கள் தான். நான் 2003 இலையோ அல்லது 2002 இலையோ அவஸ்திரேலிஅ வர உதவி என்று CCNA எடுத்தேன். பிறகு CCNP ஆவது எடுப்பது என்று கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிக்கிறன். (ஓகே செய்யுற வேலக்கும் Router/Switch களுக்கும் தொடர்பில்லை..) என்றாலும் வெறும் CCNP எடுத்துப்போட்டு இஞ்சை சிலபேர் ஆடுகிற ஆட்டத்தைக் காணச் சகிக்குதில்லை.

அதுதான் நானும் வாழ்த்துகள் தெரிவிச்சனான்.