Thursday, June 19, 2008

நல்வரவு

இந்த பதிவுக்கு வந்த அனைவருக்கும் வணக்கம் .

எல்லாரும் இணையத்தில பதிவுகளை எழுதீனம் எண்டு நானும் ஒரு பதிவை பதிஞ்சு போடுவம் எண்டு இதை தொடங்கி இருக்கிறன் .. பாப்பம் என்னென்ன பின்னூட்டங்கள் வரப்போகுதோ தெரியேல்லை ...
என்னடா பதிவுக்கு புது மாதிரி பெயரா "பாதசாரியின் தினக்குறிப்பு" எண்டு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் ஜோசிக்கிறது விளங்குது . இந்த பெயருக்கு பின்னால ஒரு வரலாற்று சம்பவம் ஒண்டிருக்கு... அதென்னண்டால் என்னுடைய கதா நாயகர்களில் ஒருத்தர் தன்னுடைய பதிவை " உந்துறுளி தினக்குறிப்பு " எண்டு பதிஞ்சு போட்டு வீரமரணம் அடைஞ்சிட்டார் (உங்களுக்கு தெரியும் எண்டாலும் அவர் யாரெண்டு சொல்லுறன் .. அவர் வேறையாருமில்லை "சே" தான்..).. அப்ப என்ற பதிவுக்கும் அப்பிடி ஒரு பெயர் வைச்சா நானும் ஒரு வரலாற்று நாயகன் ஆகலாம் எண்டொரு பகல் கனவுதான் ....
இந்த பதிவில முழுக்க முழுக்க என்னை சார்ந்த விடயங்களும் பொது விடயங்களும் உள்ளடக்கபட்டிருக்கும் ... (ஒரு பாதுகாப்பு தான் பாருங்கோ .. இல்லாட்டி கனக்க பிரச்சினை வரும்...) ஒருத்தரும் கோவிக்க வேண்டாம் உங்கள பற்றி எழுதேல்லை எண்டு. விசயங்களை தாங்கோ எழுதுவம்..
இந்த பதிவுக்கு வரும் எல்லோரும் தயவு செய்து பின்னூட்டங்களை பதிஞ்சிட்டு போங்கோ ..
இல்லாட்டி அழுதுடுவன் ..


10 comments:

Gowri Ananthan said...

தொடக்கம் எல்லாம் நல்லா தான் இருக்கு. மேல எழுதுங்கோ பார்க்கலாம்..

Nadesh said...

Vaalthukal... Naankal ungal pathivukalukaka kaathirukiroom..:-)
Viraivil pathivu seyungo..
Naan thamilla pirahu type pannuren parungo.. :-))

Nadesh

Shaseevan said...

அனந்தன அண்ணா,
வாழ்த்துக்கள்.. எழுதுங்கோ தொடர்ந்து..
சில விசயங்கள்..,
ஆஸ்மா நோயாளியாகப் பிறந்து சிறுவயதில் நண்பர்களின் விளையாட்டுக்களில் இருந்து அந்நியப்பட்டு வாழ்ந்த சேகுவேரா, மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் ஒரு முறை தென்னாபிரிக்கவைச் சுற்றிப் பார்க்க உந்துருளியில் கிளம்பிய வேளை தன்னைச் சுற்றியுள்ள சமூகம் எவ்வாறு அடக்குமுறைக்குட்பட்டு வாழ்கின்றது என்ற உண்மையைக் கண்டுணர்கின்றார். பெண்ளுடன் நட்பை ஏற்படுத்துவதைத் தனது வாழ்நாள் சாதனையாகக் கொண்டிருக்கும் ஒரு வாலிபன் சமூகம் தொடர்பாக தனக்கேற்பட்ட அதிர்ச்சி மனநிலைகள் காரணமாக ஒரு சமூகப் போராளியாக மாறுகின்றான். 'மோட்டார் சைக்கிள் டயறி' என்ற அவரது குறிப்பேடு அவனது மாற்றத்தை தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

சே வின் மனதில் ஏற்பட்ட மனமாற்றத்தின் பின் இறுதிவரையும் சே ஒரு செயல்வீரனாகவே வாழ்ந்து மரித்தார். செயற்பாடுகளின் மத்தியில் ஓய்வு நேரத்தில் மட்டுமே சே எழுதினார். கியூபாவில் பொருளாதார அமைச்சராக இருந்த காலத்தில் கியூபாவின் பொருளாதாரத்தை 5 வருடங்களில் உச்சநிலைக்கு கொண்டுசென்றார்.

பொதுமனநிலை சார்ந்திருந்த கருத்தியல்கள் சோசலிச எழுச்சியின் பின்பும் பின்னவினத்துவ காலத்திலும் அதை விட்டு விலகிய 'விளிம்பு' என்ற தளம் நோக்கிய நிலையை அடைந்தது. இதை ஏன் சொல்கின்றேன் எனின், சோசலிசப் பொருளாதாரத்திற்கான மக்கள் ஆணையைப் பெற்றும், திறந்த பொருளாதாரம் தான் தனக்கு உவப்பானது எனக்கூறியபடி முதலாளித்துவ நாடுகளுக்காக 'சேவை'யையே தனது முக்கிய பொருளாதாரப் பலமாகக் கொண்டுள்ள சிங்கப்பூரில் 'வெறுங்காலுடன்' நடந்தால் பொலிஸ் பிடிக்காதா என்ன? :-)

மேலும், சே யின் ரசிகன் தனது வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து 'சமூக மாற்றத்திற்கான' உழைப்பாளியாக மாறுவதை எப்போதும் வரவேற்க வேண்டும். (கௌரி அக்கா கோவிக்கக் கூடாது. சே யிற்கும் காதலி'கள்' இருந்தார்கள். :-) அவர்கள் சே யையும் சேயினது போராட்டத்தையும் ரசித்தார்கள். அதன் வலிகளுக்கு இடையிலும்.. ). ஆக, உலகத்தில் தோன்றும் ஒவ்வொரு சேயையும் வரவேற்போம். ஒவ்வொரு 'சே' யினது காதலிகளும் சேர்ந்து தான் சமூக மற்றத்திற்காக உழைத்தார்கள். அவ்வகையில் கௌரி அக்காவையும் நாம் வாழ்த்துகிறோம். போற்றுகிறோம்.. :-)

கீழ இருக்கிற லிங் அயும் ஒருக்கா பாருங்கோ..
http://groups.google.com/group/noolaham/browse_thread/thread/2d9467599c456268/7204b342169b93c7?#7204b342169b93c7

Shaseevan said...

http://groups.google.com/group/noolaham/browse_thread/thread/2d9467599c456268/7204b342169b93c7?#7204b342169b93c7

Shaseevan said...

http://groups.google.com/group/noolaham/browse_thread/thread/2d9467599c456268/b76192f9e1f838af?#b76192f9e1f838af

Ananthan said...

எனக்கு தெரியும் சசீவன் நானும் "சே" இன் ஒரு ரசிகன்..
நீ அனுப்பின தொகுப்புக்களை முதலிலும் நான் பார்த்திருக்கிறன் .. அனுப்பியதற்கு நன்றி ..
இதைப்பற்றி முதலிலும் ஒருக்கா நாங்க விவாதம் செய்திருக்கோம் ஞாபகம் இருக்கா?

இப்ப்பதான் சே இன் மகளுடைய புத்தகம் ஒன்றும் வாசிச்சனான் சாஒஸ் உடனான பேட்டி..
நல்ல தரமானதொரு புத்தகம் நீண்ட நாட்களிற்கு பின் வாசிச்சிருக்கன்.

ஆனால் என்ற பதிவில சமூக சீர்திருத்தங்களை எதிர் பார்க்காதீங்கோ ..

Ananthan said...

சமூகத்தை திருத்துற அளவிற்கு இன்னும் நான் வளரேல்லை பாருங்கோ ..

JK said...

Ananthan, Good attempt. Better use aggregators. Then you will find more traffic to your blog. Here is a good one
http://www.tamilmanam.net/index.html

All the best.

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

hi
Good
Put the allighment as JUstify
that will be better in this template

guru

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!
:)